நெல்லிக்காய் முடிச்சு
முன்னுரை:
நாம் நமது Amazing DIY World இணையதள பக்கத்தில் பிளாஸ்டிக் வயர் கூடைகளை(Plastic Wire Bag) எவ்வாறு போடுவது என்று பயிற்சி கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இதுவரை ''அடிப்படை முடிச்சை(Basic Knots)'' எவ்வாறு போடுவது என்று பலவகையான முடிச்சுகளை(Knots) தெளிவான பயிற்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நெல்லிக்காய் முடிச்சை(Amal Knot) எவ்வாறு போடுவது என்று பயிற்சி கட்டுரையின் மூலம் புதிய முடிச்சை இன்று நீங்கள் கற்றுக்கொள்ள போகிறீர்கள்.
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
மேலே உள்ள படத்தில் உள்ளது தான் நெல்லிக்காய் முடிச்சு(Amla Knot). அதன் பெயர் காரணம் உங்களுக்கு இந்த புகைப்படத்தை பார்த்ததுமே தெரிந்திருக்கும். இந்த முடிச்சு போடுவது கடினம் இல்லை. அதே நேரத்தில் எளிமையான செயலும் இல்லை.
எனவே நெல்லிக்காய் முடிச்சை(Amla Knot) எப்படி போடுவது என்று நாங்கள் பதிவிட்டுள்ள இந்த கட்டுரையில் கூறியுள்ள ஒரு ஒரு படிகளையும் நீங்கள் மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் செய்தல் இந்த நெல்லிக்காய் முடிச்சு(Amla Knot) உங்களுக்கு எளிமையான ஒரு பயிற்சியாக தான் இருக்க போகிறது.
தேவையான பொருள்கள்:
முதலில் நீங்கள் நெல்லிக்காய் முடிச்சை(Amla Knot) போடுவதற்கு தேவையான பொருள்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
- 3 நிறங்களில் 1 அடி நீளமுள்ள வயர் துண்டுகள்.
- கத்தரிக்கோல்
நெல்லிக்காய் முடிச்சு போடுவது எப்படி? (How To Make Amla Knot In Plastic Wire Bag)
Step 1:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
மேலே படத்தில் உள்ளது போல 3 வயர் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளும் வயர்கள் வேறு நிறங்களில் இருந்தால் சிறப்பு. ஏன் என்றால் உங்களுக்கு வேறுபாடு தெரிவதற்காக. ஒரு நிறத்திலும் போட முடியும். உங்களுக்கு ஒரே நிறத்தில் போட்டால் நீங்கள் புரிந்து கொள்வது கடினம். அதற்காகவே வேறு நிறங்களில் வயர்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
Step 2:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
மேலே படத்தில் காட்டியது போல மஞ்சள் நிற வயரையும், சிவப்பு நிற ஒயரையும் சரி சமமாக மடக்கி பிடித்து கொள்ளுங்கள்.
Step 3:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
அடுத்தபடி மேலே படத்தில் உள்ளது போல இடது கையில் உள்ள சிவப்பு நிற வயரின் மடிந்த வளையம் போன்ற அமைப்பை மேலே படத்தில் உள்ளது போல மஞ்சள் நிற வயரில் நுழைத்து முடிச்சு விழாத அளவிற்கு மிகவும் மென்மையாக பிடித்துக்கொள்ளவும்.
Step 4:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இப்போது மூன்றாவது ஒயரான நீல நிற வயரை முன்பு அந்த இரண்டு வயர்களையும் மடித்து போலவே இந்த வயரையும் மேலே படத்தில் உள்ளது போல சரியாக சம அளவுள்ளதாக மடித்துக்கொள்ளவும்.
Step 5:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
முன்பு எவ்வாறு சிவப்பு நிற வயரை மஞ்சள் நிற ஒயரின் வளையத்தில் நுழைத்தீர்களோ அதே போல நீல நிற ஒயரின் வளையத்தை மேலே படத்தில் உள்ளது போல அந்த இரண்டு நிறங்களில் சேர்த்து நுழைத்துக்கொள்ளுங்கள். மேலே படத்தில் உள்ளது போல மையத்தில் நீல நிற வயரை வைத்து இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள்.
Step 6:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இப்போது மூன்று நிறங்களின் அடிப்பகுதி அதாவது திரும்பிய நிலையில் உள்ள பகுதியை படத்தில் காட்டியது போல மேலே தெரியும்படி வைத்துக்கொள்ளவும். இப்போது மேலே படத்தில் அம்புக்குறி இட்டு கட்டிய மஞ்சள் நிற வயரின் திரும்பிய பகுதியை மேல்நோக்கி மடித்து மேலே உள்ள இரண்டாவது படத்தை போல வைத்துக்கொள்ளவும்.
Step 7:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
அடுத்து வரும் படிகள் சற்று குழப்பம் நிறைந்த பகுதிகள் எனவே கவனமாக பயிற்சி செய்யவும். இப்போது மேலே படத்தில் காட்டியது போல அம்புக்குறி இட்ட சிவப்பு நிற வயரின் திரும்பிய பகுதியை மடித்து மஞ்சள் நிற வயரின் வளையத்தில் நுழைத்துக்கொள்ளவும். இந்த படிகள் எல்லாம் முடிச்சு விழாத அளவிற்கு மிகவும் மெதுவாகவும் மென்மையாவும் செய்து கொள்ளவும். அதே சமயத்தில் மையப்பகுதி உங்கள் பயிற்சியின் போது நழுவாமலும் மிகவும் கவனமாக பிடித்துக்கொள்ளுங்கள்.
Step 8:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இப்போது முன்பு செய்தது போல தான் படத்தில் அம்புக்குறி இட்ட நீல நிற வயரின் திரும்பிய பகுதியை மஞ்சள் நிற ஒயரின் வளையத்தில் நுழைத்துக்கொள்ளுங்கள்(இத்துடன் இந்த படி முடியவில்லை).
Step 9:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
அதே போல நீங்கள் வயர்களை வளையத்தில் விட்டு இழக்கும் போது அது முடிச்சு விழும் அளவிற்கு இருக்க வேண்டாம்.மிகவும் நேர்த்தியான ஒரு நுழைவை கொடுங்கள்.
Step 10:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இந்த படியில் உங்களுக்கு, உங்கள் மைய பிடியில் இருந்து சுற்றி 6 வயர்கள் இருக்கும். மேலே படத்தில் உள்ளது போல இருக்கும். அந்த வயர்களை அம்புக்குறி இட்டது போல 6 வயர்களையும் ஒன்றொன்றாக அதன் எதிர்திசையில் உள்ள வயரின் திசையை பிடித்து ஒன்றாக இருக்கவும்.
Step 11:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இந்த இழுவை மெதுவாகவும் நேர்த்தியவும் இருக்கட்டும். ஏனென்றால் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் மிகவும் அதிகமா இழுத்தால் உங்கள் முடிச்சில் சிக்கல் விழும் அபாயம் உள்ளது. எனவே மெதுவாக நேர்த்தியாக இழுக்கவும்.
Step 12:
![]() |
How To Make Amla Knot In Plastic Wire Bag |
இப்போது உங்களுக்கு இந்த மேலே உள்ள படத்தை போல ஒரு நெல்லிக்காய் முடிச்சு உங்கள் முன் இருக்கும். வெற்றிகரமாக நீங்கள் நெல்லிக்காய் முடிச்சை(Amla Knot) பயிற்சி செய்து முடித்துள்ளீர்கள்.
முடிவுரை:
இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் தெளிவாக புரியும்படியும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே போல நீங்கள் உணர்ந்தாள் எங்களுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த பயிற்சி கட்டுரையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் எங்களுக்கு command செய்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். அதே போல எங்கள் Youtube பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக