பலாமுள் (அ) மல்லிகை முடிச்சு
Jack Fruit (or)Jasmine knot
நாம் நமது Amazing DIY World இணையத்தின் பக்கத்தில் இப்போது வரை ''அடிப்படை முடிச்சுகள் போடுவது எப்படி?''(How to Make Basic Knots?) என்ற தலைப்பில் கட்டுரைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இப்போது "பலாமுள் (அ) மல்லிகை முடிச்சு போடுவது எப்படி?" (How to Make Jack Fruit Knot (or) Jasmine Knot?) என்ற பயிற்சி கட்டுரையினை பார்க்கவிருக்கிறோம்.
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இந்த பலாமுள் (அ) மல்லிகை முடிச்சை(Jack Fruit Knot (or)Jasmine Knot) போடுவது மிகவும் எளிமையான ஒரு செயலே. நாங்கள் இந்த கட்டுரையில் பதிவிட்டிருக்கும் எல்லா படிகளையும்(Steps) நீங்கள் கவனமாக செய்து வந்தால் இந்த அடிப்படை முடிச்சை(Basic Knot) மிகவும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
முதலில் நீங்கள் இந்த முடிச்சை போட தேவையான பொருள்களை முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
- 1 அடி நீளமுள்ள 2 ஒயர்கள்.(வேறு வேறு நிறங்கள் இருந்தால் சிறப்பு).
- கத்தரிக்கோல்.
பலாமுள் (அ) மல்லிகை முடிச்சு போடுவது எப்படி? (How to Make Jack Fruit Knot (or) Jasmine Knot?)
Step 1:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
மேலே படத்தில் உள்ளது போல 2 நிறங்களை கொண்ட 1 அடி நீளமுள்ள பிளாஸ்டிக் ஒயர்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரே அளவுள்ளதாக வெட்டிக்கொள்ளுங்கள்.
Step 2:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
பின்பு மேலே படத்தில் காட்டியது போல உங்கள் கைகளில் உள்ள ஒயர்களை சம அளவாக மடித்து இரண்டு கைகளிலும் ஒவ்வொன்றாக பிடித்துக்கொள்ளுங்கள்.
Step 3:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது மேலே படத்தில் காட்டியது போல உங்கள் இடது கையில் உள்ள ஒயரின்(மஞ்சள் நிறம்) வளையம்(Loop) போன்ற அமைப்பை வலது கையில் உள்ள ஒயரின்(ரோஸ் நிறம்) மேல் பகுதில் இணைத்து மேலே படத்தில் காட்டியது போல "V" வடிவில் பிடித்துக்கொள்ளுங்கள்.
Step 4:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
நீங்கள் அடிப்படை முடிச்சு(Basic Knot) பயிற்சியில் செய்த ஒரு செயலை இங்கே நினைவு கூற வேண்டிய நேரம் இது. மேலே படத்தில் காட்டியது போல ஒரு ஒயரை மேல் பக்கமும் மற்றொரு கீழ் பக்கமும் பார்த்தவாறு உள்ளது. அதை நீங்கள் இப்போது மேலே படத்தில் காட்டியது போல தனியாக தெரியும் படி பிடித்தது கொள்ளுங்கள்(இந்த படி உங்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காக).
Step 5:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது படத்தில் அம்புக்குறி இட்டு கட்டியுள்ள ரோஸ் நிற ஒயரின் திரும்பிய பக்கத்தை படத்தில் காட்டியவாரே மேல் நோக்கி மடக்கி பிடித்து கொள்ளவும். இந்த செயல்களை செய்யும் போது உங்கள் விரலால் பிடித்த மையப்பகுதி நழுவலாம். அந்த "V" போன்ற அமைப்பை கொண்ட பகுதி உங்கள் பிடியில் இருந்து நழுவாமல் நன்றாக இறுக்கமாக பிடித்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் மேலே படத்தில் காட்டியது போல மடக்கி பிடித்த ரோஸ் நிற ஒயரை ரோஸ் நிற வளையம் போன்ற அமைப்பில் நுழைக்கவும்.
Step 6:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது மேலே படத்தில் காட்டியது போல வளையத்தில் நுழைத்த அந்த ரோஸ் நிற ஒயரை இழுத்து முடிச்சு விழாத அளவிற்கு இழுத்து வைத்துக்கொள்ளுங்கள். அம்புக்குறி இட்ட பகுதியை கவனித்து பாருங்கள், அதில் ரோஸ் நிற ஒயரின் மேல் பகுதி மேல் பகுதி அதாவது மேடான பகுதி மேல் பக்கம் உள்ளது போன்ற நிலையில் உள்ளது.
நீங்கள் அதே போல வைத்தால் மட்டுமே முடிச்சு சரியாக வரும். எனவே நீங்களும் அதே போல அந்த ரோஸ் நிற ஒயர் மேல் பக்கம் உள்ளது போல வைத்துக்கொள்ளுங்கள்.
Step 7:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது படம் 7-ல் காண்பிக்கப்பட்டுள்ளது போல மஞ்சள் நிற ஒயரின் திரும்பிய பகுதியை மடித்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு பகுதி நீங்கள் திரும்பிய நிலையில் உள்ள மஞ்சள் நிற ஒயரை தான் மேல் நோக்கி மடிக்க வேண்டும்.
Step 8:(முக்கியமான பகுதி)
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது மேலே படத்தில் உள்ளது போல நீங்கள் மடித்த மஞ்சள் நிற ஒயரின் திரும்பிய பகுதியை, ரோஸ் நிறத்தின் வளையத்தில் நுழைத்து வெளிய எடுக்கவும். மிகவும் கவனமாக இப்போது மஞ்சள் நிறுத்தின் வளையத்திலும் அதே ஒயரை விட்டு வெளியே எடுக்கவும்.
(குறிப்பு: நீங்கள் ரோஸ் நிற ஒயரின் வளையத்தில் விட்டு எடுக்கும் போது, அந்த வளையத்தில் முன்பே நீங்கள் நுழைத்து வைத்திருந்த ரோஸ் நிற ஒயரின் மேல் இருக்குமாறு நுழைத்து கொள்ளவும்.)
Step 9:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது உங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போல 4 முனை கொண்ட ஒரு அமைப்பு கிடைக்கும். அந்த 4 முனைகளையும் நன்றாக பிடித்து நான்கு முனைகளையும் பிடித்து இழுத்து விடுங்கள். ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒயரை பிடித்து இழுக்கும் போதும் அதற்கு நேரெதிரே இருக்கும் ஒயரையும் பிடித்து இழுக்கவும்.
Step 10:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
மேலே சொன்னது போல நீங்கள் நான்கு மூலைகளையும் நன்றாக இழுத்தால் இப்போது படத்தில் காட்டியது போல உங்களுக்கு பலாமுள் (அ) மல்லிகை முடிச்சு(Jack Fruit (or) Jasmine Knot) கிடைத்துவிடும்.
Step 11:
![]() |
How To Make Jack Fruit (or)Jasmine Knot |
இப்போது நீங்கள் வெற்றிகரமாக பலாமுள் (அ) மல்லிகை முடிச்சை(Jack Fruit (or) Jasmine Knot) பயிற்சி செய்து அதை எவ்வாறு போடுவது என்று கற்றுகொண்டுள்ளீர்கள்.
முடிவுரை :
இதே போல நீங்கள் புதுப்புது ஒயர் கூடைகளின்(Plastic Wire Bag) தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால் எங்கள் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சல் (E-mail) முகவரியை கொடுத்து நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். அப்போது தான் எங்களால் பதிவிடப்படும் அனைத்து பதிவுகளும் உங்களுக்கு மின்னஞ்சல்களாக(E-mail) உடனடியாக வந்து சேரும்.
இந்த கட்டுரை பயிற்சி பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த கட்டுரையை பகிர்ந்து அவர்களையும் பயன்பெற செய்யுங்கள். இந்த கட்டுரை பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். எங்கள் YOUTUBE சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக