https://www.safestcontentgate.com/updynzvs?key=175bd9e9b49ceef136cb8badc611c2b2

பிளாஸ்டிக் வயர் கூடையில் பிஸ்கட் முடிச்சு போடுவது எப்படி? How To Make Biscuit Knot In Plastic Wire Bag

 பிஸ்கட் முடிச்சு

(Biscuit Knot)

    முன்னுரை:

        நாம் நமது Amazing DIY World இணையத்தின் பக்கத்தில் இதுவரை அடிப்படை முடிச்சுக்களை(Basic Knots) எப்படி போடுவது என்பதை பற்றி பார்த்து வந்தோம். அந்த வரிசையில் இன்று பிஸ்கட் முடிச்சு(Biscuit Knot) போடுவது எப்படி (How to make Biscuit Knot) என்று பார்க்க போகிறோம். 

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        பிஸ்கட் முடிச்சு(Biscuit Knot) போடுவது என்பது எளிமையான ஒரு பயிற்சியே. ஆனால் சற்று நீங்கள் இந்த கட்டுரையை தெளிவாகவும் கவனமாகவும் பார்க்கவும் . இந்த பயிற்சியை நீங்கள் தெளிவாக கவனித்து அதே போல செய்து பார்த்தால் உங்களாலும் மிகவும் எளிதாக இந்த முடிச்சை எந்த பிழையுமின்றி போட முடியும்.

    தேவையான பொருள்கள்:

    • 1 அடி நீளமுள்ள 4 துண்டு ஒயர்கள்(2 நிறங்கள் எடுத்து கொள்வது சிறப்பு)
    • கத்தரிக்கோல் 

    பிளாஸ்டிக் வயர் கூடையில் பிஸ்கட் முடிச்சு போடுவது எப்படி? (How To Make Biscuit Knot In Plastic Wire Bag)

    Step 1:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        பிஸ்கட் முடிச்சு(Biscuit Knot) போடுவதற்கு முதலில் மேலே படத்தில் உள்ளது போல 1 அடி நீளமுள்ள 4 துண்டு வயர்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த வயர்கள் 2 நிறங்கள் உள்ளது போல இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முடிச்சு போடும் போது உங்களுக்கு வித்தியாசம் தெரிவதற்காக. இல்லையென்றால் உங்களுக்கு பயிற்சியில் குழப்பம் ஏற்படலாம்.

    Step 2:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        நீங்கள் எடுத்து வைத்த வயர் துண்டுகளை மேலே படத்தில் உள்ளது போல சம அளவாக மடித்து கொள்ளவும். அதில் ஒரு நிறமான நீல நிறத்தை இடது கையில் விரல்களால் இரண்டையும் சேர்த்து பிடித்துக்கொள்ளவும். மீண்டும் வேறொரு நிறமான சிவப்பு நிறத்தையும் அதே போல சம அளவாக மடித்து உங்கள் வலது கையில் விரல்களால் பிடித்துக்கொள்ளவும்.

    Step 3:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

       இப்போது மேலே படத்தில் உள்ளது போல வலது கையில் உள்ள சிவப்பு நிற வயரின் வளையத்தை இடது கையில் உள்ள நீல நிற ஒயரின் மடங்கிய பகுதியில் நுழைத்துக்கொள்ளுங்கள். அதை படத்தில் காட்டியது போல ஒரு இன்ச் கீழே சற்று இறக்கமாக வைத்து நன்றாக பிடித்துக்கொள்ளவும்.

    Step 4:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது மேலே படத்தில் அம்புக்குறி இட்டுள்ள நீல நிற வயரின் திரும்பிய நிலையில் உள்ள வயரை மேலே உள்ள படத்தின் இரண்டாவது படத்தில் சுட்டிக்காட்டியது போல மேல் நோக்கி மடித்து கொள்ளவும். 

    (குறிப்பு: நீல நிற வயரின் திரும்பிய பகுதியை வலது பக்கத்தில் மட்டுமே  மடிக்க வேண்டும். படத்தில் உள்ளது போல.)

    Step 5:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது நீல நிற வயரின் இரண்டாவது உள்ள திரும்பிய பக்கத்தை முன்பு செய்தது போல அதே போல வலது புறத்தில் மேல் நோக்கி மடித்து கொள்ளவும். 

    Step 6:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது மேலே உள்ள முதல் படத்தில் அம்புக்குறி இட்ட சிவப்பு நிற வயரின் திரும்பிய பகுதியை நீல நிற வயரின் 2 வளையங்களில் நுழைத்து கொள்ளவும். மேலே படத்தில் இரண்டாவது மூன்றாவது உள்ள படங்களில் அம்புக்குறி இட்ட பகுதிகளை போல நீங்கள் முன்பு மடித்து வைத்துள்ள நீல நிற வயரின் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

    Step 7:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது உங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போல ஒரு அமைப்பு கிடைத்திருக்கும். அந்த அமைப்பை அம்புக்குறி இட்ட வயர்களை நன்றாக இறுகும் அளவிற்கு இழுத்துக்கொள்ளவும்.

    Step 8:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        நீங்கள் முன்பு மடித்த இரண்டு நீல நிற வயர்களையும் இப்போது மேலே படத்தில் காட்டியது போல கீழ் நோக்கி மடக்கி பிடித்து கொள்ளவும். இந்த பயிற்சியை செய்யும் போது  உங்களுக்கு முன்பு செய்த முடிச்சுகள் உங்கள் கைகளில் இருந்து விலகி செல்லும் வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் விரல்களின் பிடியை நன்றாக இறுக்கமாக பிடித்துகொள்ளளவும்.

    Step 9:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது நீங்கள் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கும் அந்த 4-வது துண்டு வயரை எடுத்து முன்பு செய்து போலவோ சரிசமமாக மடித்து கொள்ளவும். அந்த வயரை உங்கள் வலது கையில் பிடித்துக்கொள்ளவும்.

    Step 10:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        உங்கள் வலது கையில் நீங்கள் மடித்து வைத்திருக்கும் அந்த 4-வது துண்டு வயரை உங்கள் இடது கையில் உள்ள  நீல நிற வயரின் வளையம் போன்ற அமைப்பில் நுழைத்துக்கொள்ளவும். மேலே படத்தில் காட்டியது போல நீங்கள் அதை நீல நிற வயரின்  மடிப்பு உள்ள பகுதியில் நிறுத்திக்கொள்ளவும்.

    Step 11:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது நீங்கள் முன்பு மடித்து வைத்துள்ள அந்த நீல நிற வயரின் இரண்டு  துண்டுகளை படத்தில் உள்ளது போல மேலே இருக்குமாறு மீண்டும் விட்டுவிட வேண்டும்.

    Step 12:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இந்த படியில் நீங்கள் இப்போது இறுதியாக நுழைத்த சிவப்பு நிற வயரின் 4-வது துண்டின் திரும்பிய பகுதியை மேல் பக்கம் இருப்பது போல அதாவது மேலே படத்தில் உள்ளது போல வைத்துக்கொள்ளுங்கள்.

    Step 13:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இப்போது மேலே நீங்கள் மேல் நோக்கி வைத்த அந்த வயரை படத்தில் காட்டியது போல நீல நிற வயரின் இரண்டு வளையத்திலும் நுழைத்துக்கொள்ளவும். இந்த படியில் நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் சிவப்பு நிற வயரை நுழைக்கும் போது முன்பு மேல்நோக்கி உள்ள நீல நிற வயரின் 2 துண்டுகள் நீங்கள் நுழைக்கும் சிவப்பு நிற வயரின் கீழே இருக்குமாறு வைத்துக்கொள்வது முக்கியம். எனவே அந்த ஒரு விடயத்தை கவனித்துக்கொள்ளங்கள்.

    Step 14:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        நீங்கள் 90% முடிச்சை நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது மேலே படத்தில் அம்புக்குறி உள்ளது போல 8 துண்டுகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். அந்த துண்டுகளை அம்புக்குறி இட்ட திசையில் இழுத்து முடிச்சு நன்றாக இறுகும் அளவிற்கு இழுக்கவும்.

    Step 15:

    How To Make Biscuit Knot In Plastic Wire Bag
    How To Make Biscuit Knot In Plastic Wire Bag

        இறுதியாக இந்த பயிற்சியில் உங்களுக்கு கிடைத்தது பிஸ்கட் முடிச்சு. ஆம்! நேயர்களே உங்களுக்கு பிஸ்கட் முடிச்சு கிடைத்துவிட்டது. இந்த வெற்றிகரமான பயிற்சி முடிவை கொண்டாடுவதற்காக நீங்கள் உங்கள் பதில் காணும் 👍 இந்த பொத்தானை அழுத்தி எங்கள் பயிற்சிக்கு உங்களது நன்மதிப்பை கொடுங்கள். 

    முடிவுரை:

        இந்த பயிற்சி கொடுக்க நீங்கள் எங்களுக்கு சில கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த கட்டணங்கள் 

    1. 👍 இந்த பொத்தானை அழுத்துவது.

    2. இந்த கட்டுரையை பிறருக்கு பகிர்வது.

    3. எங்கள் Youtube  Channel ஐ Subscribe செய்வது.

        இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் தெளிவாக புரியும்படியும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே போல நீங்கள் உணர்ந்தாள் எங்களுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த பயிற்சி கட்டுரையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் எங்களுக்கு command செய்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

        இந்த கட்டுரை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். அதே போல எங்கள் Youtube பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    Popular

    Recent

    Featured Post

    Buy Good Quality Plastic Bag Wire Online ! தரமான பிளாஸ்டிக் பேக் வயர்கள் உங்களக்கு வேண்டுமா? இதோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    Buy Good Quality Plastic Bag Wire Online Buy Good Quality Plastic Bag Wire Online  வணக்கம் தோழி!       அனைத்து நல்லுள்ளம் கொண்ட பெண்மணிகளுக்...