https://www.safestcontentgate.com/updynzvs?key=175bd9e9b49ceef136cb8badc611c2b2

பிளாஸ்டிக் வயர் 2 ரோல் கிராஸ் கட் கூடை போடுவது எப்படி ? (How To Make 2 Roll Cross Cut Wire Bag?)

2 ரோல் கிராஸ் கட் வயர் கூடை(2 Roll Cross Cut Wire Bag)

முன்னுரை:

                    நாம் நமது  Amazing DIY World  இணையதள பக்கத்தில் பிளாஸ்டிக் வயர் கூடைகளை(Plastic Wire Bag)  எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் 2 கட்டு வயர்களை(Wire) பயன்படுத்தி எவ்வாறு 2 ரோலில் கிராஸ் கட் வயர் கூடைகளை(Cross Cut Wire Bag) உருவாக்குவது என்பதை பற்றி தான் இந்த கட்டுரை விளக்க  போகிறது. 
    
    மேலே படத்தில் உள்ளது தான் 2 ரோல் கிராஸ் கட் வயர் கூடை(2 Roll Cross Cut Wire Bag). இந்த கூடையை தான் எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள போகிறீர்கள். இந்த கூடையை உருவாக்க தேவையான பொருள்கள்.

தேவையான பொருள்கள்:

1.  40 துண்டுகள் 8 அடி வீதம்.
2. ஒரு அடி அளவுக்கோல்(30 cm Scale)
3. கத்தரிக்கோல்.
4.ஒரு கட்டு பிளாஸ்டிக் வயர். 

பிளாஸ்டிக் வயர் 2 ரோல் கிராஸ் கட் கூடை போடுவது எப்படி ? (How To Make 2 Roll Cross Cut Wire Bag?)

 

Step 1:

  •     முதலில் நீங்கள் மேலே கூறப்பட்டுள்ள தேவையான பொருள்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொருள்களில் உள்ள அளவுகோலை எடுத்து நீங்கள் எடுத்து வைத்துள்ள ஒரு கட்டு வயரில் 40 துண்டுகளை வெட்ட வேண்டும். அவை 8 அடி வீதம் இருக்க வேண்டும்.  

Step 2:

  •         பின்பு நீங்கள் வெட்டி வைத்துள்ள அந்த 40 வயர் துண்டுகளை வைத்து ஒரு ஒரு 2 துண்டு வயர்களை வைத்தும் ஒரு அடிப்படை முடிச்சை (Basic Knot) போட வேண்டும்.  எவ்வாறு அடிப்படை முடிச்சை போடுவது என்ற கட்டுரையை நமது பக்கத்தில் பதிவிட்டுள்ளோம். அந்த அடிப்படை முடிச்சை (Basic Knot) நீங்கள் கற்றுக்கொண்டால் மட்டுமே இந்த கூடையை நீங்கள் உருவாக்க முடியும். 
  •     அந்த அடிப்படை முடிச்சை (Basic Knot) நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் அடிப்படை முடிச்சு (Basic Knot)என்ற இந்த படியில் அடிக்கோடிட்டு வார்த்தை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அந்த அடிப்படை முடிச்சு கட்டுரையை படிக்கச் முடியும். 
  •     அது போல் நீங்கள் 40 வயரை பயன்படுத்தி அடிப்படை முடிச்சை போடுவதன் மூலம் உங்களுக்கு 20 அடிப்படை முடிச்சுகள் கிடைக்கும். 

Step 3:

  •     அடுத்து இந்த குட்டி கூடை கிராஸ் கட் முறையில் பின்னுவதால், நீங்கள் முன்பு உருவாக்கி வைத்துள்ள 8 முடிச்சுகளை எவ்வாறு இணைப்பது என்பதை முன்பு  கூறியுள்ள Cross Cut முறையில் அடிப்படை முடிச்சுகளை எவ்வாறு இணைப்பது ? என்ற கட்டுரையை படித்து பாருங்கள். 
  •     அந்த கட்டுரையை படிக்க மேலே அடிக்கோடிட்டு வார்த்தையை கிளிக் செய்து பார்க்கவும்.

Step 4:

  • அடுத்து நீங்கள் மேலே உள்ள சிறிய சிறிய வயர்களை அந்த பகுதியிலேயே சொருகி கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் கீழே உள்ள எங்கள் வீடியோவை பாருங்கள். 
  • அந்த வீடியோவில் உங்களுக்கு தெளிவான பயிற்சி ஒன்றை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். அந்த  பயிற்சி உங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு பயிற்சியாக இருக்கும். 

Step 5:

  • இறுதியில் உங்களுக்கு பிளாஸ்டிக் வயர் குட்டி கூடை(Mini Plastic Wire Bag) அமைப்பது எவ்வாறு என்பதை பற்றி நீங்கள் அந்த கட்டுரையில் கற்றுக்கொள்ளலாம்.
  • உங்களுக்கு மேலும் எழும் சந்தேகங்களுக்கும் இந்த பிளாஸ்டிக் வயர் குட்டி கூடையின் தெளிவான பயிற்சிக்கும் கீழே உள்ள எங்கள் YOUTUBE விடியோவை பாருங்கள். அந்த வீடியோவில் உங்களுக்கு இந்த கூடையை பற்றிய தெளிவான விளக்கங்கள் கொடுத்துள்ளோம். 


முடிவுரை:

    இந்த பயிற்சி கொடுத்ததற்காக நீங்கள் எங்களுக்கு சில கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த கட்டணங்கள் 

1. 👍 இந்த பொத்தானை அழுத்துவது.

2. இந்த கட்டுரையை பிறருக்கு பகிர்வது.

3. எங்கள் Youtube  Channel ஐ Subscribe செய்வது.

    இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் தெளிவாக புரியும்படியும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே போல நீங்கள் உணர்ந்தாள் எங்களுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த பயிற்சி கட்டுரையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் எங்களுக்கு command செய்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

 இந்த கட்டுரை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். அதே போல எங்கள் Youtube பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular

Recent

Featured Post

Buy Good Quality Plastic Bag Wire Online ! தரமான பிளாஸ்டிக் பேக் வயர்கள் உங்களக்கு வேண்டுமா? இதோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Buy Good Quality Plastic Bag Wire Online Buy Good Quality Plastic Bag Wire Online  வணக்கம் தோழி!       அனைத்து நல்லுள்ளம் கொண்ட பெண்மணிகளுக்...